மாற்றமின்றிய விசா கட்டணங்கள் இன்று முதல் அமுல்

அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்ட விசா கட்டணங்கள் இன்று(07) முதல் அமுல்

by Staff Writer 07-05-2024 | 7:18 AM

Colombo (News 1st) சுற்றுலா விசா கட்டணங்கள் தொடர்பில் அமைச்சரவையில் நேற்று(06) மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இன்று(07) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, வௌிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகைதரும் போது நபரொருவருக்கு 30 நாட்களுக்கான விசாவிற்காக அறவிடப்பட்ட 50 டொலர் என்ற பழைய கட்டணம் இன்று(07) முதல் அவ்வாறே பேணப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய 7 நாடுகளுக்கு இதுவரை இலவசமாக வழங்கிய விசா சேவையை மாற்றமின்றி நடைமுறைப்படுத்தவும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கைக்கு வௌிநாட்டவர் ஒருவர் வருகைதரும் போது விசா வழங்குவதற்கான முழுமையான பொறுப்பை குடிவரவு - குடியல்வு திணைக்களம் வகிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.