விசா கட்டணத்தில் மாற்றமில்லை

விசா கட்டணத்தில் மாற்றமில்லை

by Staff Writer 06-05-2024 | 7:27 PM

Colombo (News 1st) வௌிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகைதரும் போது 30 நாட்களுக்கான விசாவிற்கு அறவிடப்பட்ட 50 டொலர் என்ற பழைய கட்டணத்தை அவ்வாறே பேணுவதற்கு இன்று(06) கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகிய 7 நாடுகளுக்கு இதுவரை இலவசமாக வழங்கிய விசா சேவையை மாற்றமின்றி நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இலங்கைக்கு வௌிநாட்டவர் ஒருவர் வருகைதரும் போது விசா வழங்கும் முழுமையான பொறுப்பை குடிவரவு - குடியல்வு திணைக்களம் வகிக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.