உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து

உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து; தொடர்ந்து 7 ஆவது ஆண்டாக முதலிடம்

by Bella Dalima 20-03-2024 | 3:41 PM

Colombo (News 1st) இப்பட்டியல் தனி நபர் வாழ்க்கைத் திருப்தி,  மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் ஆகியவற்றின் சுய மதிப்பீடுகளின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 

2024 ஆம் ஆண்டிற்காக ஐ.நா வௌியிட்டுள்ள உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்தும் 7 ஆவது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. 

அதற்கு அடுத்த இடங்களில் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.

10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்பட்டு வரும் அறிக்கையில், முதல் முறையாக, அமெரிக்காவும் ஜெர்மனியும் முதல் 20 மகிழ்ச்சியான நாடுகளில் இடம்பெறவில்லை். அந்த நாடுகள் முறையே 23, 24 ஆவது இடத்தில் உள்ளன.

கனடா, இங்கிலாந்து, கோஸ்டாரிகா, குவைத் ஆகிய நாடுகள் முதல் 20 இடங்களில் உள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, பல்கேரியா மற்றும் லாட்வியா ஆகியவையும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

கணக்கெடுக்கப்பட்ட 143 நாடுகளில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. லெபனான் மற்றும் ஜோர்தான் ஆகியவை சரிவை சந்தித்துள்ளன. 

உலகின் பெரும்பாலான பிராந்தியங்களில் இளைய தலைமுறையினர் பழைய தலைமுறையினரை விட மகிழ்ச்சியாக இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை 128 ஆவது இடத்தில் உள்ளது. 

இந்தியா 126 ஆவது இடத்திலும் சீனா 60 ஆவது இடத்திலும் நேபாளம் 93 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 108 ஆவது இடத்திலும் மியன்மார் 118 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 129 ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.   


உலகில் மகிழ்ச்சியான முதல் 20 நாடுகள்

1. பின்லாந்து
2. டென்மார்க்
3. ஐஸ்லாந்து
4. சுவீடன்
5. இஸ்ரேல்
6. நெதர்லாந்து 
7. நோர்வே
8. லக்ஸம்பர்க்
9.ஸ்விட்சர்லாந்து
10. அவுஸ்திரேலியா

11. நியூசிலாந்து
12. கொஸ்டா ரிக்கா 
13. குவைத் 
14. ஆஸ்திரியா
15. கனடா
16. பெல்ஜியம் 
17. அயர்லாந்து
18. செக் குடியரசு
19. லித்துவேனியா 
20. ஐக்கிய இராச்சியம் 

 
ஆசியாவில் மகிழ்ச்சியான முதல் 10 நாடுகள்

1. சிங்கபூர்
2. தாய்வான்
3. ஜப்பான்
4. தென் கொரியா
5. பிலிப்பைன்ஸ்
6. வியட்நாம் 
7. தாய்லாந்து
8. மலேசியா 
9. சீனா
10. மொங்கோலியா 
 

ஏனைய செய்திகள்