பொம்மை காரில் ஓர் சாதனைப் பயணம்

பொம்மை காரில் ஓர் சாதனைப் பயணம்

by Bella Dalima 20-02-2024 | 5:20 PM

Colombo (News 1st) பொம்மை காரில் சில மாற்றங்களைச் செய்து, அதில் மணித்தியாலத்திற்கு 148.454 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் ஜெர்மனியை சேர்ந்த பொறியியல் மாணவரான மார்சல் போல் (Marcel Paul). 

இந்த வியக்கத்தக்க சாதனையை Guinness World Records தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

அதில், தனது மேம்படுத்தப்பட்ட மினியேச்சர் காரில், பின்பக்கமாக சாய்ந்து படுத்தவாறு, Hockenheimring பந்தயப் பாதையில் மார்சல் போல் மிக வேகமாக பயணிக்கும் காணொளி பகிரப்பட்டுள்ளது. 

பகிரப்பட்ட ஒரே நாளில் 6.5 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 21,000 லைக்குகளையும் இந்த காணொளி பெற்றுள்ளது. 

பால்ய காலக் கனவை நிஜமாக மாற்றிய மார்சல் போலின் முயற்சியையும் துணிச்சலையும் பலரும் பாராட்டி வருவதுடன், சமூக வலைத்தளங்களில் அதனை பரவலாக பகிர்ந்தும் வருகின்றனர்.