அமெரிக்காவை சேர்ந்த Safer Human Medicine நிறுவனம் தொடர்ந்து பல மருத்துவ ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், ஜோர்ஜியா மாகாணத்தின் Bainbridge நகர் அருகில் சுமார் 30,000 குரங்குகள் வசிப்பதற்காக 200 ஏக்கரில் ஒரு குட்டி நகரை உருவாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மருத்துவ ஆய்வுகளுக்கு தேவையான நீண்ட வால் குரங்குகள் இங்கே இனப்பெருக்கம் செய்யப்பட்டு, வளர்க்கப்படும் என Safer Human Medicine நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
396 மில்லியன் டொலர் செலவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், Bainbridge நகரவாசிகள் இதற்கு எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர்.
சுமார் 14,000 பேர் வசிக்கும் Bainbridge நகரில் 30,000 குரங்குகளை வளர்ப்பது மக்களுக்கு அச்சுறுத்தலானது என நகரவாசிகள் கூறியுள்ளனர்.
இதுபோன்ற மருத்துவ ஆராய்ச்சிக்காக குரங்குகளை ஓரிடத்தில் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்வது கொடூரமானது என விலங்குகள் நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.