சாதனை படைத்த ஜஸ்ப்ரிட் பும்ரா

ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்; சாதனை படைத்த ஜஸ்ப்ரிட் பும்ரா

by Bella Dalima 07-02-2024 | 3:39 PM

Colombo (News 1st) ICC டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இதற்கு முன்பாக பும்ரா அதிகபட்சமாக ICC தரவரிசையில்  3 ஆம் இடம் பிடித்துள்ளார். தற்போது அஸ்வினை பின்னுக்கு தள்ளி  முதலிடம் பிடித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசி 9 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. 

ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் டெஸ்ட்டில் முதலிடம் பிடிப்பது இதுவே முதன்முறை எப்பதுடன், அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 

இதற்கு முன்னதாக கபில்தேவ் டெஸ்டில் 1979 டிசம்பர் முதல் 1980 பெப்ரவரி வரை இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ஜாகீர் கான் 3 ஆவது இடம் பிடித்துள்ளார்.