புனரமைக்கப்பட்ட ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம் திறந்து வைப்பு

by Staff Writer 05-02-2024 | 9:34 PM

Colombo (News 1st) புனரமைக்கப்பட்ட ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(05) திறந்து வைக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் பலர் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

புதிய LED மின்குமிழ் கட்டமைப்பும் மைதானத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மின்குமிழ் கட்டமைப்பு இலங்கையிலுள்ள மைதானமொன்றில் பொருத்தப்பட்ட முதலாவது  சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு மேலதிகமாக சர்வதேச தரத்திலான நீச்சல் தடாகம், நீர் சுத்திகரிப்பு அலகு மற்றும் விளையாட்டு உபாதை சிகிச்சைக்கான மருத்துவ நிலையம் என்பனவும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, தம்புள்ளை சர்வதேச மைதானத்தை அண்மித்து நடத்தப்படும் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய சுப்பர் லீக் தொடர்களில் பங்கேற்கும் அணிகளுக்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மைதானத்தின் மின்குமிழ் கட்டமைப்பு திறந்து வைக்கப்பட்டதையடுத்து நாட்டின் பிரபல கலைஞர்களினால் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி கண்களுக்கு விருந்து படைத்தது.

ஏனைய செய்திகள்