பிரித்தானிய இளவரசி ஆன் நாடு திரும்பினார்

பிரித்தானிய இளவரசி ஆன் நாடு திரும்பினார்

by Bella Dalima 13-01-2024 | 3:10 PM

Colombo (News 1st) பிரித்தானிய இளவரசி  ஆன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று (13) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். 

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-505 விமானத்தினூடாக அவர் பிரித்தானியா நோக்கி பயணமாகியுள்ளார். 

கடந்த 10 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த இளவரசி ஆன்,  தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்தார்.

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இளவரசி  நாட்டிற்கு விஜயம் செய்தார்.

ஏனைய செய்திகள்