by Bella Dalima 25-05-2022 | 5:19 PM
Colombo (News 1st) ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பதிவு செய்து நேரத்தை ஒதுக்கிக்கொண்ட பின்னர் திணைக்களத்திற்கு வருகை தருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை கடந்த 17 ஆம் திகதி முதல் நடைமுறையில் உள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், அதிக எண்ணிக்கையிலானவர்கள் முன்பதிவுகளை மேற்கொள்ளாது நேரடியாக வருகை தருவதை அவதானிக்க முடிவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டினை பெறுவதற்கு முன்பதிவு செய்து நேரத்தை ஒதுக்கிக்கொண்டவர்களுக்கு மாத்திரம் சேவை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.
http://www.immigration.gov.lk/ என்ற இணையத்தளத்தின் மூலம் அல்லது 070-7101-060 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு முன்பதிவுகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.