சட்டவிரோதமாக பெட்ரோலை கொண்டுசென்ற இருவர் கைது

சட்டவிரோதமாக 850 லீட்டர் பெட்ரோலை கொண்டுசென்ற இருவர் கைது

by Staff Writer 23-05-2022 | 3:00 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வெல்லாவெளி பகுதியில் கெப் வாகனமொன்றில் சட்டவிரோதமாக ஒரு தொகை பெட்ரோலை கொண்டுசென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லாவெளி நகரில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடை ஊடாக பயணிக்க முற்பட்ட கெப் வாகனமொன்றை சோதனைக்குட்படுத்திய போது அதில் 850 லீட்டர் பெட்ரோல் தொகையை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முயற்சித்தமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகா ஓயா பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 47 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து, நாளை மறுதினம்(25) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.