மண்சரிவினால் மூடப்பட்டுள்ள பஹல கடுகண்ணாவை வீதி எப்போது திறக்கப்படும்?

by Staff Writer 13-11-2021 | 10:30 PM
Colombo (News 1st) கடந்த 9 ஆம் திகதி பெய்த கடும் மழை காரணமாக பஹல கடுகண்ணாவை வீதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அங்கிருத்த கடைத்தொகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், தற்போது கடைகள் மூடப்பட்டுள்ளன. தேசிய கட்டிட ஆய்வு நிறுவக அதிகாரிகள் இன்று (13) அங்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். மண்மேட்டில் இருந்து வௌியேறும் நீர் விசேட இயந்திரம் ஒன்றினால் வௌியேற்றப்படுகிறது. இந்நிலையில், பஹல கடுகண்ணாவை வீதியூடான போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், வீதியை எப்போது திறப்பது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை.