விசேட விமானம் துபாயிலிருந்து கட்டுநாயக்க வருகை

இலங்கையர்களை ஏற்றிய விசேட விமானம் துபாயிலிருந்து கட்டுநாயக்க வந்தடைந்தது

by Staff Writer 07-05-2020 | 2:53 PM
Colombo (News 1st) இலங்கையர்களை ஏற்றிய விசேட விமானம் ஒன்று துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கை திரும்புவதற்கு எதிர்பார்த்திருந்த 197 பேர் துபாயிலிருந்து இன்று நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டார். விமான நிலையத்தை வந்தடைந்தவர்களுக்கு கிருமி தொற்று நீக்கப்பட்டதுடன், மருத்துவ பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.