வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள்

வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Bella Dalima 04-05-2024 | 4:22 PM

Colombo (News 1st) இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை, இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில், இலங்கையர்களுக்கு தாதியர், விவசாயம், நிர்மாணத்துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

அதற்கமைய, 409 பேர் தாதியர் சேவையிலும், 804 பேர் நிர்மாணத்துறையிலும், 1558 பேர் விவாசாயத்துறையிலும் பணியாற்றச் சென்றுள்ளனர்.

மேலும் 172 இலங்கையர்கள் மே மாதத்தின் முதல் வாரத்தில் விவசாயத்துறை வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு பயணிக்கவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் 1912 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு சென்றிருந்தனர்.

அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேலுக்கு  செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.