சமையல் எரிவாயு விலை குறைப்பு

இன்று (03) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு

by Bella Dalima 03-05-2024 | 2:50 PM

Colombo (News 1st) லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (03) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க,  4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3940 ரூபாவாகும்.

5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 70 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1582 ரூபா என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, அதன் புதிய விலை 740 ரூபாவாகும்.