T20 உலகக்கிண்ண கிரிக்கெட்டி: இலங்கை அணி அறிவிப்பு

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிப்பு; மேலதிக வீரர்கள் பட்டியலில் விஜயகாந்த் வியாஸ்காந்த்

by Bella Dalima 09-05-2024 | 7:28 PM

Colombo (News 1st) T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணி இன்று (09) அறிவிக்கப்பட்டது. 

எதிர்வரும்  ஜூன் 1 முதல் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. 

இந்நிலையில், போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியின் பெயர் விபரங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ளது. 

அணித்தலைவராக வனிந்து ஹசரங்கவும் துணை தலைவராக சரித் அசலங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

குசால் மெண்டிஸ், பெத்தும் நிஷங்க, கமிந்து மென்டிஸ், சதீர சமரவிக்ரம, அஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்‌ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண, நுவன் துஷாரா, தில்ஷான் மதுஷங்க ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 

அசித்த பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக்க ராஜபக்ஸ, ஜனித் லியனகே ஆகியோர் மேலதிக வீரர்களுக்கான தெரிவில் இடம்பெற்றுள்ளனர்.