'டித்வா' பேரிடருக்கு இன்றுடன் ஓராண்டு..

முழு நாட்டையும் கண்ணீரில் மூழ்கடித்த 'டித்வா' பேரிடருக்கு இன்றுடன் ஓராண்டு..

by Staff Writer 26-11-2026 | 10:23 AM

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய 'டித்வா' பேரிடர் ஏற்பட்டு இன்றுடன்(26) ஓராண்டு நிறைவடைகின்றது.

கடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில் இலங்கைக்கு தெற்கே, கடற்பகுதியில் உருவான தாழமுக்க மண்டலம் பின்னர் வலிமைமிக்க சூறாவளியாக வலுவடைந்தது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் பதிவானது.

இந்த அனர்த்த நிலைமையால் 650-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் காணாமல் போயினர்.

சூறாவளி அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை நினைவுகூரும் தேசிய சர்வமத நிகழ்வுகள் இன்று(26) பதுளை நகரை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

தேசிய சர்வமத நிகழ்விற்கு இணையாக நினைவு முத்திரை வெளியிடுதல் மற்றும் சிறப்பு நூல் வெளியீடு என்பனவும் நடைபெறுகின்றன.