26, 27ஆம் திகதிகளில் மூடப்படும் அமெரிக்க தூதரகம்

26, 27ஆம் திகதிகளில் மூடப்படும் அமெரிக்க தூதரகம்

by Staff Writer 24-11-2026 | 6:34 PM

Colombo (News 1st) எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொண்டாடப்படும், நன்றி பகிர்தல் தினத்தை முன்னிட்டு குறித்த 02 நாட்களும் தூதரகம் மூடப்படுவதாக தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்படப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தூதரகத்தின் சேவைகள் வழமை போன்று மீண்டும் முன்னெடுக்கப்படும் என தூதரகம் குறிப்பிட்டுள்ளது.