.webp)
-561590.jpg)
COLOMBO (News 1st) 3000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகளவிலான லாஃப்ஸ் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (13) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.
இதனூடாக வீட்டு பாவனையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எரிவாயு சிலிண்டர்கள் கட்டம் கட்டமாக மீண்டும் விநியோகிக்கப்படவுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்கு முன்னர் அருகில் உள்ள உரிமம் பெற்ற லாஃப்ஸ் எரிவாயு விற்பனை முகவரையோ அல்லது 1345 என்ற துரித இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி சமையல் எரிவாயு சிலிண்டர் கையிருப்பு தொடர்பில் உறுதிப்படுத்தி கொள்ள முடியும் என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
