.webp)
-561596.jpg)
COLOMBO (News 1st) மேட்டுநில சரிவு பகுதிகளில் காணப்படும் ஸ்திரமற்ற நிலைமை மற்றும் இதற்கு முன்னர் மண்சரிவுகள் ஏற்பட்ட இடங்களில் மீண்டும் மண்சரிவு ஏற்படுதல் ஆகிய காரணங்களினால் கடுகண்ணாவ பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அந்த பகுதியூடான போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் க
ண்டி மாவட்டத்திற்கான பிரதான புவிசரிதவியலாளர் சதுரி சுபசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, கண்டி - கொழும்பு பிரதான வீதியில் ஆபத்தான நிலையிலுள்ள பாறைகளை அகற்றும் பணிகள் இன்று (13) ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த வீதியைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட, அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
