தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (06) முதல் விசேட பஸ் சேவைகள்

by Staff Writer 06-11-2026 | 4:14 PM

COLOMBO (News 1st) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (06) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதற்காக மேலதிகமாக 200இற்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

இந்த விசேட போக்குவரத்து சேவையானது எதிர்வரும் 10 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.