.webp)

Colombo (News 1st) ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் Óscar Puente தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 69 பேர் உயிரிழந்ததை அடுத்து, அமைச்சர் பதவி விலக வேண்டுமென அழுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஒரே ஆண்டில் ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டாவது பாரிய ரயில் விபத்து இதுவென்பதால் அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் நேற்று(03) தெரிவித்தார்.
அரசியல் கண்ணியம் மற்றும் விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான மரியாதை நிமித்தமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்ததுடன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் Óscar Puente அறிவித்துள்ளார்.
