ஓய்வை அறிவித்தார் கிளென் மெக்ஸ்வெல்

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வை அறிவித்தார் கிளென் மெக்ஸ்வெல்

by Staff Writer 03-11-2026 | 8:46 AM

COLOMBO (News 1st) அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரரான கிளென் மெக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதான மெக்ஸ்வெல், அவுஸ்திரேலியாவுக்காக 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3990 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், 77 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

130 T20 கிரிக்​கெட் போட்டிகளில் விளையாடி 2897 ஓட்டங்களை பெற்றுள்ள கிளென் மெக்ஸ்வெல், 51 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

சர்வதேச கிரிககெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றாலும், 2027 - 2028 இல் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பிக் பேஷ் லீக் கிரிக்கட் தொடரில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக அவர் விளையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.