பசில் ராஜபக்ஸவிற்கு மீண்டும் பிடியாணை

பசில் ராஜபக்ஸவிற்கு மீண்டும் பிடியாணை

by Staff Writer 27-10-2026 | 6:27 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பிரவுன்ஸ் ஹில் காணி தொடர்பான நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினர் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த மாத்தறை நீதவான் சதுர திசாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி மாத்தறை - பிரவுன்ஸ் ஹில் பிரதேசத்தில் காணியொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி, அவரது கணவர் திஸ்ஸ கலப்பத்தி மற்றும் முதித ஜயகொடி ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.