12 வருட கடுழிய சிறைதண்டனை

மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா மற்றும் மொஹமது நெளஃபர் மௌலவி ஆகியோருக்கு 12 வருட கடுழிய சிறைதண்டனை

by Staff Writer 26-10-2026 | 7:33 PM

2019 ஆம் ஆண்டில் புத்தளம், வண்ணாத்திவில்லு - லெக்டோஸ் வத்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களை சேமித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட அபு உமர் என அழைக்கப்படும் மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா மற்றும் மொஹமது நெளஃபர் மௌலவி ஆகியோருக்கு 12 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 
பிரதிவாதிகள் தடுப்புக் காவலிலும் விளக்கமறியலிலும் கழித்த காலத்தைக் கழித்து குறித்த சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துமாறும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.
லால் ரணசிங்க பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்ரமசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.