.webp)
-561304.jpg)
COLOMBO (News 1st) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் சிறைக்கைதி ஒருவருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் இன்று(26) உத்தரவிட்டுள்ளது.
பராமரிப்பு கொடுப்பனவை செலுத்தத் தவறிய குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி, அவரது மனைவியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை அறிவித்த போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
