.webp)

Colombo (News 1st) நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் உள்ளிட்ட சிலரை அங்கிருந்து வெளியேறுமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து வௌியேற நடவடிக்கை எடுத்தனர்.
விகாரமகாதேவி பூங்காவில் பத்தாவது நாளாக இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
