.webp)
-561131.jpg)
COLOMBO (News 1st) காவன்திஸ்ஸ யானைக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர் எஹெட்டுவெவ பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிமிருந்து வௌிநாட்டு தயாரிப்பிலான போர் 12 ரக துப்பாக்கி, 24 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
மீகலேவ பகுதியில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக டயானா என அழைக்கப்படும் பெண் யானை சுடப்பட்ட சம்பவத்துடன் குறித்த சந்தேகநபர் தொடர்புப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணைகளுக்காக அதிகாரிகள் குழுவொன்று உஸ்கல சியம்பலாண்டுகம பகுதிக்கு சென்றுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விசாணைகளை முன்னெடுக்குமாறு கோரி சுற்றாடல் அமைச்சர் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்காக பாதுகாப்பு அமைச்சின் உதவி பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களிலும் மக்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்த 'காவன்திஸ்ஸ' இலங்கையின் இயற்கை சூழலில் வாழ்ந்து வந்த மிகவும் பெரிய மற்றும் உயரமான காட்டு யானையாக கருதப்படுகின்றது.
கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி காவன்திஸ்ஸவின் வலது முன்னங்காலில் துப்பாக்கி சூட்டு காயங்கள் அடையாளம் காணப்பட்டனெ
கடந்த வெள்ளிக்கிழமை மீகலேவ வனஜீவராசிகள் அலுவலகத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட உஸ்கல - சியம்பலாங்கமுவ 0ஆம் இலக்க வயல் வெளியில் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
உயிரிழந்த காவான்திஸ்ஸ யானையின் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில், அதன் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் (17) இடம்பெற்றன.
மரணத்திற்கான உண்மையான காரணத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக யானையின் உடற் பாகங்கள் பேராதனை பல்கலைக்கழகத்தின் விசேட நிபுணர் குழுவொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
