நாமல் ராஜபக்ஸ எதிர்வரும் 23 வரை விளக்கமறியலில்..

கிரிஷ் விவகாரத்தில் கைதான நாமல் ராஜபக்ஸ, ஜானகி சிறிவர்தன ஆகியோர் எதிர்வரும் 23 வரை விளக்கமறியலில்..

by Nadeeshan Meedin 17-10-2026 | 4:30 PM

COLOMBO (News 1st) கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஸ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் தொடர்பில் பிணை உத்தரவு நேற்று (16) பிறப்பிக்கப்படவிருந்தது. 

என்றாலும் சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவை மாத்திரம் நேற்று அறிவிப்பதாக நீதவான் இதன்போது அறிவித்தார். 

அதற்கமைய சந்தேகநபர்களான ஜானகி சிறிவர்தன , நாமல் ராஜபக்ஸ ஆகியோர் எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

அன்றைய தினம் நாமல் ராஜபக்ஸவின் பிணை தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. 

சந்தேகநபரான ஜானகி சிறிவர்தன பணிப்பாளராக கடமையாற்றிய கிரிஷ் நிறுவனத்திலிருந்து சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு 70 மில்லியன் ரூபாய் இலஞ்சமாக வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.