தமிழக ஆளுந​ராக இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

தமிழ்நாட்டின் ஆளுந​ராக இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்

by Staff Writer 13-10-2026 | 8:56 AM

Colombo (News 1st) தமிழ்நாட்டின் ஆளுந​ராக இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்​ளார்.

இந்திய குடியரசுத் தலை​வர் திரௌபதி முர்முவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுந​ராக 2021ஆம் ஆண்டு முதல் ஆர்​.என்.ரவி பதவி வகித்து வந்த நிலை​யில், கடந்த மார்ச் மாதம் அவர் மேற்கு வங்க ஆளுந​ராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்​து, கேரள மாநில ஆளுந​ராகப் பதவி வகித்து வந்த இராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகரிடம் தமிழக ஆளுநருக்​கான கூடு​தல் பொறுப்பு வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், அவர் தற்போது தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.