உழவு இயந்திரம் மோதிய விபத்தில் பெண் பலி

உழவு இயந்திரம் மோதிய விபத்தில் பெண் பலி

by Staff Writer 06-10-2026 | 5:38 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - தென்மராட்சி கொடிகாமம், A9 வீதியின் மீசாலை புத்தூர் சந்தியில் இன்று(06) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மிருசுவில் பகுதியை சேர்ந்த 37 வயதான பெண் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.