உலக சனத்தொகையில் 7.8% பேருக்கு உணவுப் பற்றாக்குறை

சர்வதேச உணவு இழப்பு மற்றும் வீணாகுதல் தொடர்பான விழிப்புணர்வு தினம்

by Staff Writer 29-09-2026 | 10:16 AM

COLOMBO(News1st) - சர்வதேச உணவு இழப்பு மற்றும் வீணாகுதல் தொடர்பான விழிப்புணர்வு தினம் இன்றாகும். 

ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் திகதி இந்நாள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்றது.

"உணவு இழப்பு மற்றும் வீணாகுவதை குறைப்பதன் மூலம் ஏற்படும் மாற்றத்திற்கான ஆற்றல்" எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச உணவு இழப்பு மற்றும் வீணாகுதல் தொடர்பான விழிப்புணர்வு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கைக்கு அமைய 2025ஆம் ஆண்டில் 645 மில்லியன் பேர், அதாவது உலக சனத்தொகையில் 7.8 % பேர் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கையில் 30 % உணவுப் பொருட்கள் நுகரப்படாமல் வீணடிக்கப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் நுகரப்படக்கூடிய சுமார் 4000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் நாளாந்தம் வீணடிக்கப்படுவதாக துறைசார் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் உணவு வீண்விரயத்தைக் குறைப்பதற்காக உலக உணவு விவசாய அமைப்புடன் இணைந்து ஐந்தாண்டு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 

ஏனைய செய்திகள்