சீன குழுவை அழைக்க நடவடிக்கை

பொலன்னறுவை வைத்தியசாலை வெடிப்பு : சீன குழுவை அழைக்க நடவடிக்கை

by Staff Writer 28-09-2026 | 9:41 AM

COLOMBO (News 1st) பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு கசிவினால், ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக சீன குழுவொன்றை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையிலுள்ள சீன தூதரகத்தின் ஊடாகச் சீன அரசாங்கத்திற்கு தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  கூறினார். 
இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அமைச்சரவை மட்டத்திலும் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் நேற்று முன்தினம் அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. 
இந்த வெடிப்பு சம்பவத்தினால் வைத்தியசாலையின் பிரதான சமையலறை மற்றும் அதனை அண்மித்த பல கட்டிடங்களுக்கும்  பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது.
சம்பவத்தில் 07 ​பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் கவலைக்கிடமான நிலையிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். 
ஹபரணை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.