வட்டி வீதங்களை அதிகரித்த அமெரிக்க மத்திய வங்கி

வட்டி வீதங்களை அதிகரித்த அமெரிக்க மத்திய வங்கி

by Nadeeshan Meedin 17-09-2026 | 9:51 AM

Colombo (News 1st) அமெரிக்க மத்திய வங்கி வட்டி வீதங்களை அதிகரித்துள்ளது.

03 வருடங்களின் பின்னர் அமெரிக்க மத்திய வங்கி வட்டி வீதங்களை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

3.75 வீதமாக காணப்பட்ட வட்டி வீதம் 4 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வட்டி வீதங்கள் குறைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை கருத்திற்கொண்டு வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய வங்கி அறிவித்துள்ளது.