.webp)
-560364.jpg)
COLOMBO (News 1st) யால தேசிய பூங்காவின் 1ஆம் மற்றும் 2ஆம் வலயங்களை இன்றிருந்து அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் வறட்சி காரணமாக 1ஆம் மற்றும் 2ஆம் வலயங்கள் மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், ஏனைய வலயங்கள் பார்வையாளர்களின் வருகைக்காக திறந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
