.webp)
-560340.jpg)
COLOMBO (News 1st) எல்லைப் பிரச்சினைக்கு தீர்வுகான இந்திய - சீன தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) ஆகியொருக்கிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று (12) இடம்பெற்றுள்ளது.
BRICS மாநாட்டிற்கு இணையாக புதுடில்லியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
07 ஆண்டுகளுக்கு பிறகு சீன ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேச்சுவார்ததையில் ஈடுப்பட்டுள்ளார்.
இதன்போது இருநாடுகளுக்கும் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினைகள், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருதரப்பு உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு எல்லைப் பிரதேசங்களில் அமைதியும் நல்லிணக்கமும் அவசியமான அடிப்படையாகும் என இந்தியப் பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
நாடுகளின் நிலைமைகள் வெவ்வேறாக இருப்பினும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்பட முடியும் என சீன ஜனாதிபதி தெரிவித்தார்.
நிலவும் எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான, முறையான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காண்பதற்கு இருநாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
