தெஹிவளை கைக்குண்டு தாக்குதலில் 2 சிறுவர்கள் பலி

தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் - 2 சிறுவர்கள் பலி

by Staff Writer 11-09-2026 | 7:13 AM

Colombo (News 1st) தெஹிவளை - ஸ்ரீ சங்கபோதி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.
11 மற்றும் 17 வயதுகளையுடைய 2 சிறார்களே உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலில் குறித்த இரு சிறார்களின் தந்தையே காயமடைந்துடன் அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இன்று (11)  அதிகாலை சுமார் 03.20 அளவில் இந்த கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 2 குழுக்களிடையே நிலவும் மோதலின் விளைவாக இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.