.webp)

Colombo (News 1st) 2026 ஆசிய கிண்ண மகளிருக்கான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தோல்வியை காணாத அணியாக நடப்பு சம்பியனான இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.
பங்களாதேஷ் அணியுடனான நேற்றைய போட்டியில் 04 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியமையின் ஊடாக இலங்கை மகளிர் அணி இம்முறை தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்தது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்றது.
பந்துவீச்சில் சமுதி பிரபோதா 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 19.2 ஓவர்களில் 06 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலுசேர்த்தார்.
2026 - மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும், உள்நாட்டு ஔிபரப்பு உரிமையை பெற்றுள்ள சிரச ஊடக வலையமைப்பின் TV1 தொலைக்காட்சி மற்றும் WWW.SIRASATV.LK இணையத்தளம் ஊடாக நீங்கள் நேரலையில் பார்வையிட முடியும்.
