கொழும்பு - பேராதனை ரயில் சேவை அடுத்த மாதம்

கொழும்பு கோட்டை - பேராதனை ரயில் சேவைகள் அடுத்த மாதம் ஆரம்பம்

by Staff Writer 06-09-2026 | 2:22 PM

Colombo (News 1st) கொழும்பு கோட்டை - பேராதனை இடையிலான ரயில் சேவைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாத முதல் வாரத்திலிருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.


டித்வா சூறாவளியால் சேதமடைந்த பேராதனை வரையான ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


மருதானையிலிருந்து கண்டி வரையான ரயில் மார்க்கங்களில் மாத்திரம் 97 இடங்களில் சேதம் ஏற்பட்டிருந்தது.


அவற்றில் 92 பகுதிகளுக்கான புனரமைப்பு பணிகள் கடந்த மாதம் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


பலன ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மார்க்கத்தில் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது.


அதனருகிலுள்ள 05 இடங்களும் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்தமைதால் கடுமையாக சேதமடைந்திருந்தன. 


தற்போது மலையக மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் கொழும்பிலிருந்து ரம்புக்கனை வரை மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.


ரம்புக்கனையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவைகள் இதுவரையும் முன்னெடுக்கப்படவில்லை.


நானுஓயா - பதுளை ரயில் சேவைகள் கடந்த 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகின.


டித்வா சூறாவளியால் பலத்த சேதங்களுக்குள்ளான பேராதனை மற்றும் கண்டிக்கு இடையிலுள்ள களு பாலம் மீதான புனரமைப்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.