QR எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் தொடர்ந்தும்...

QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும்..

by Staff Writer 05-09-2026 | 8:04 AM

Colombo (News 1st) QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் தொடர்ந்தும் நிலவிவரும் பதற்ற நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.
நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார். 
எனினும், மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலை மீண்டும்  வலுவடைந்தால் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதினை தடுக்கும் நோக்கில் QR முறைமையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த தீர்மானித்ததாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.