.webp)
-560071.jpg)
Colombo (News 1st) இன்று (05) முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,365 ரூபாவாகும்.
05 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,750 ரூபாவாகும்.
2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 815 ரூபாவாகும்.
