பமுனுகம, எபாமுல்ல கடலில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு

பமுனுகம, எபாமுல்ல கடலில் மூழ்கி நால்வர் உயிரிழப்பு

by Staff Writer 31-08-2026 | 4:33 PM

COLOMBO (News 1st)

பமுனுகம, எபாமுல்ல கடலில் மூழ்கி 04 ​பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் தாய், மகள் மற்றும் 2 உறவினர் பிள்ளைகள் அடங்குகின்றனர்.

நேற்று (30) பிற்பகல் 5 மணியளவில் பமுனுகம, எபாமுல்ல கடலில் நீராடச்சென்ற போதே அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் இன்று காலை சடலங்கள் மீட்கப்பட்டன.