நீதிமன்ற சுவர்களில் வெடிப்பு - விசாரணை ஆரம்பம்

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் அறை சுவர்களில் வெடிப்பு - விசாரணை ஆரம்பம்

by Staff Writer 31-08-2026 | 7:25 AM

Colombo (News 1st) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் அறைகளின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவித்தார்.


இந்த விடயம் தொடர்பில் பொறியியலாளர் குழுவினர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் குறித்த இடங்களைப் பார்வையிட்டுள்ளதுடன் இது தொடர்பில் இன்று(31) விசேட அறிக்கை கிடைக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 


அனைத்து தரப்பினரும் இணைந்து இந்த விடயம் தொடர்பில் விசேட கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார மேலும் தெரிவித்தார்.