.webp)
-559754.jpg)
Colombo (News 1st) 2026ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட பெயர் பட்டியல் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் காட்சிப்படுத்தப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவெலகெதர தெரிவித்துள்ளார்.
சுமார் 31,000,00 பேர் அஸ்வெசும கொடுப்பனவிற்காக இம்முறை விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களது தகவல்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அந்தவகையில் பிரதேச செயலக மட்டத்திலான தெரிவுக் குழுக்களின் மதிப்பீட்டு பணிகள் தற்போது 85 வீதம் வரை நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதி வாரத்திலிருந்து கொடுப்பனவு வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
