.webp)
-559660.jpg)
Colombo (News 1st) கடந்த 2 நாட்களில் அதிவேக வீதிகள் ஊடாக 12.4 கோடி ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. நீண்ட வார இறுதி விடுமுறையினால் அதிகளவானோர் அதிவேக வீதிகளை பயன்படுத்தியமையே இதற்குக் காரணமென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களில் 325,316 வாகனங்கள் அதிவேக வீதிகளுக்குள் பிரவேசித்துள்ளதுடன் 337, 631 வாகனங்கள் வெளியேறியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் அதிகளவான சாரதிகள் தெற்கு அதிவேக வீதிகளை பயன்படுத்தியுள்ளனர். குறித்த காலப்பகுதியில் தெற்கு அதிவேக வீதிகள் மூலம் பெறப்பட்ட வருமானம் 7.67 கோடி ரூபாவாகும். அத்துடன், கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி மூலம் 3.48 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்களில் மத்திய அதிவேக வீதியில் 1.29 கோடி ரூபா மொத்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
