சர்வதேச தரப்படுத்தலில் மீளவும் முதலிடத்தில் ருமேஷ்

சூரிச் டயமண்ட் லீக்கிலும் வெற்றியீட்டிய ருமேஷ் தரங்க

by Staff Writer 28-08-2026 | 7:03 PM

Colombo (News 1st)  ஈட்டி எறிதல் சாம்பியனான இலங்கையின் ருமேஷ் தரங்க Zurich Diamond League 2026 மெய்வல்லுநர் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் முதலிமிடத்தை பிடித்தார். 

92. 07 மீற்றர் தூரத்துக்கு திறமையை வௌிப்படுத்தி அவர் இந்த வெற்றியை பதிவு செய்தார். 

Diamond League மெய்வல்லுநர் போட்டிகளில் ருமேஷ் தரங்க தொடர்ச்சியாக பெற்றுக்கொண்ட 4ஆவது வெற்றி இதுவாகும். 

இதற்கு முன்னர் ரோம், டோஹா, லுஷேன்  நகரங்களில் நடைபெற்ற Diamond League மெய்வல்லுநர் போட்டிகளில் 23 வயதுடைய ருமேஷ் தரங்க  அதிசிறப்பாக செயற்பட்டு வெற்றியீட்டினார். 

இந்த வருடம் ஆடவருக்கான ஈட்டி எறிதல் தரப்படுத்தலில் வீரர் ஒருவர் பதிவு செய்த அதிசிறந்த ஆற்றல்களில் ருமேஷ் தரங்க முதலிடம் வகிக்கிறார். 

சர்வதேச தரப்படுத்தலிலும் ருமேஷ் தரங்க முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.