ஹெய்யன்துடுவ இரசாயனக் கசிவு : மண் அகற்றி அழிப்பு

ஹெய்யன்துடுவ இரசாயனக் கசிவு : வயல்வெளிகளில் கலந்த மண் அடுக்குகளை அழிக்க நடவடிக்கை

by Staff Writer 26-08-2026 | 9:34 AM

COLOMBO (News 1st)  ஹெய்யன்துடுவ பகுதியில் அமைந்துள்ள கொள்கலன் முனையம் ஒன்றிலிருந்து வயல்வெளிகளுக்கு வழிந்தோடிய இரசாயனப் பதார்த்தங்கள் கலந்த மண் அடுக்குகளைச் சேகரித்து அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இறப்பர் கையுறைகளுக்காகப் பயன்படுத்தப்படும் இரசாயனத் திரவமொன்று கொள்கலன் ஒன்றிலிருந்து கசிந்து வயல்வெளிக்கு வழிந்தோடியதையடுத்து நேற்று(25) அம்பத்தலை மற்றும் களனி கங்கை தென்கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் ஊடான நீர் விநியோகத்தை நிறுத்த வேண்டியேற்பட்டது.
இரசாயனத் திரவம் களனி கங்கையில் கலக்கும் அபாயம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் நீரின் தரம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நீர் விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.