.webp)
-559589.jpg)
COLOMBO (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே பூஸ்ஸ அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் நேற்று (25) ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, கெஹெல்பத்தர பத்மேவை எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். கெஹெல்பத்தர பத்மேவின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து 13 சிறைச்சாலை அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள், விளம்பர நடிகைகள் மற்றும் அரசியல்வாதிகள் 7 பேரின் புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
