.webp)
-559393.jpg)
Colombo (News 1st) மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார தெரிவித்தார்.
சிறைச்சாலை அதிகாரிகள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் வெலிக்கடை சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான முறையான பொறிமுறையை தயாரித்தல், மரணதண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை ஆயுள் தண்டனையாக குறைத்தல், ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை 20 ஆண்டுகளாக குறைக்கவும் கைதிகளை வீட்டுக் காவலில் வைப்பதற்கும் குறித்த குழு வழங்கிய பிரதான பரிந்துரைகளில் அடங்குகின்றன.
மரணம் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான முறையான பொறிமுறையை தயாரிக்கும் நோக்கத்திற்காகவே குறித்த குழு நியமிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.துறையராஜா தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டது.
10 மாத காலம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளை தொடர்ந்து குறித்த பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.
