புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஆரம்பம்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

by Staff Writer 20-08-2026 | 9:38 AM

Colombo (News 1st) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று(20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 48 மதிப்பீட்டு மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

380 மதிப்பீட்டு குழுக்களின் கீழ் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் திகதியளவில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.