சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு குற்றப்பத்திரிகை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

by Staff Writer 17-08-2026 | 12:45 PM

Colombo (News 1st) கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்ட மாஅதிபரால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஜெயந்தன் என அழைக்கப்படும் கதிர்காமத்தம்பி ஜெயகிஷன், ஜெயகாந்தன் என அழைக்கப்படும் நிமல் தேவ்சுகன், சீம்பு என அழைக்கப்படும் நடராஜா நகுலேந்திரன் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


2006 டிசம்பர் 16 முதல் 18ஆம் திகதிக்கு இடைப்பட்ட பகுதியில் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

ஏனைய செய்திகள்